
சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கத் துவங்கும் மாதம் ஆடி. மழை ஆரம்பித்ததன் காரணமாக ஆறுகளில் நீர் பெருகும், அதனைக் கொண்டாடும் பண்டிகையே ஆடி பதினெட்டு. உழவு தலையாய பணியாய் இருந்த நம் சமூகத்தில் நீர் வரத்து எத்தகைய கொண்டாட்டத்திற்கு உரியதாக இருந்திருக்கும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம். மண் வளத்தின் குறியீடான பச்சையம்மனை வழிபட்டு முளைப்பாரி எடுத்து, கும்மி கொட்டி இயற்கையை சிலாகித்துக் கொண்டாடும் ஓர் அற்புதத் திருநாள் ஆடி பதினெட்டு.
தமிழர் பண்டிகை என்றுமே மதக் குறியீடுகளைக் கடந்து இயற்கையை முதன்மைப் படுத்தும் பண்டிகைகளாகவே இருக்கும் என்பதற்கு ஆடிப் பெருக்கு மிகச் சிறந்த சான்று.
இன்று கால ஓட்டத்தில் நகர வாழ்வில் நீர் வரத்தினைக் கொண்டாடும் தேவை அற்றுப் போயிருந்தாலும் நம் வரலாற்றினை நமக்கு உணர்த்தும் பண்டிகையாதலால் நாம் எங்கு இருந்தாலும் ஆடிப் பெருக்கினை சிறப்பான முறையில் கொண்டாடுவது தமிழர் எனும் அடையாளத்தினை தொடர்ந்து நாம் தக்க வைத்துக் கொள்ள கண்டிப்பாக உதவும்.
In English….
Sun’s shift in direction towards South happens in the month of Aadi. Water flow in the rivers starts in Aadi with the start of rainy season after a long dry summer. Aadi perukku is about celebrating the start of this water flow in the rivers. As farming is the primary occupation, water flow in the rivers should be the best opportunity for celebration. Aadi perukku is about a day of celebration which includes worshipping the Goddess of green land Pachaiamman, taking Mulaippari, singing Kummi etc.,
Tamil festivals are always about worshipping nature with out any religious marks and Aadi Perukku festival is one other best example for the same. With the change in life style and living places the importance of raising water levels in the river might not be as enthusiastic as before. But it is our duty to celebrate Tamil people’s most traditional Aadi perukku festival in order to keep our traditions live.
#devivenkatesan #mybloginspires